Star Lucky: கொட்டுது கொட்டுது பணமா கொட்டுது.. ராகு புதையலை திறந்த ராசிகள்.. குடும்பத்தில் கோலாகலம்தான்
- Star Lucky: ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று சனிபகவானின் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Star Lucky: ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று சனிபகவானின் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய பயணம் ஒரே மாதிரி இருக்கும்.
(2 / 6)
சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று சனிபகவானின் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(4 / 6)
ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கவலையால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் அதிக பண வரவை ராகு பகவான் கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் தேவதை உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
விருச்சிக ராசி: ராகு பகவான் உங்களுக்கு திடீர் பணவரவை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் விரைவாக முடிவடையும். நிலுவையில் உள்ள காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்