Divya Yogas: 3 திவ்ய ராஜ யோகங்கள்.. 200 வருடத்திற்கு பிறகு பணம் கொட்டும் ராசிகள்.. எந்த ராசி நீங்க?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Divya Yogas: 3 திவ்ய ராஜ யோகங்கள்.. 200 வருடத்திற்கு பிறகு பணம் கொட்டும் ராசிகள்.. எந்த ராசி நீங்க?

Divya Yogas: 3 திவ்ய ராஜ யோகங்கள்.. 200 வருடத்திற்கு பிறகு பணம் கொட்டும் ராசிகள்.. எந்த ராசி நீங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 08, 2024 11:57 AM IST

Divya Yogas: 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராஜ யோகங்கள் உருவாகியுள்ள காரணத்தினால் இந்த மூன்று ராஜ யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த திவ்ய யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

3 திவ்ய ராஜ யோகங்கள்.. 200 வருடத்திற்கு பிறகு பணம் கொட்டும் ராசிகள்.. எந்த ராசி நீங்க?
3 திவ்ய ராஜ யோகங்கள்.. 200 வருடத்திற்கு பிறகு பணம் கொட்டும் ராசிகள்.. எந்த ராசி நீங்க?

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக சச யோகம் உருவாகியுள்ளது. சிம்ம ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்துள்ள காரணத்தினால் லட்சுமி நாராயண யோகம் உருவாக்கியது. சனி, புதன், சுக்கிரன் மூன்று கிரகங்களால் திரிகோண ராஜ யோகம் உருவாகியுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று ராஜ யோகங்கள் உருவாகியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராஜ யோகங்கள் உருவாகியுள்ள காரணத்தினால் இந்த மூன்று ராஜ யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த திவ்ய யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

ரிஷப ராசி

மூன்று திவ்ய யோகங்களால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வழக்கத்தை விட நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

உண்டாக்கி உள்ளது நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பல்வேறு விதமான காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

மூன்று திவ்ய யோகங்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிதிநிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துகளால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகள் தற்போது உங்களுக்கு லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்