தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

Lord Guru: குரு சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 11:29 AM IST

Lord Guru: குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது
குரு சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகின்றது

குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். அதற்குப் பிறகு இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஜூன் 13ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். குரு பகவான் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்கள் இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிக பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

நிறைய அலைச்சல் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். இதுவரை உடலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிக கவனம் செலுத்தி உழைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9