தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck Rahu: ரத்தக்கண்ணீர் ராசிகள்.. ராகு கஷ்டம் கொடுப்பார்.. விரட்டி விரட்டி அடி வாங்க போவது உறுதி

Bad Luck Rahu: ரத்தக்கண்ணீர் ராசிகள்.. ராகு கஷ்டம் கொடுப்பார்.. விரட்டி விரட்டி அடி வாங்க போவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 01:31 PM IST

Lord Rahu: ராகு மற்றும் கேது இவர்கள் இருவருக்கும் சொந்த ராசிகள் எதுவும் கிடையாது. இந்நிலையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது இந்த ஆண்டு முழுவதும் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றன.

ரத்தக்கண்ணீர் ராசிகள்.. ராகு கஷ்டம் கொடுப்பார்.. விரட்டி விரட்டி அடி வாங்க போவது உறுதி
ரத்தக்கண்ணீர் ராசிகள்.. ராகு கஷ்டம் கொடுப்பார்.. விரட்டி விரட்டி அடி வாங்க போவது உறுதி

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனிபகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக இவர்கள் விலகி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்ற போகிறார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவருக்கும் சொந்த ராசிகள் எதுவும் கிடையாது. இந்நிலையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது இந்த ஆண்டு முழுவதும் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்காது. வியாபாரம் அந்தமான சூழ்நிலையில் இருக்கும். காதல் வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் அதிகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மன உளைச்சல் அதிகம் இருக்கும். டிசம்பர் மாதம் வரை உங்களது பேச்சை கட்டுப்படுத்தினால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றன. உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். இந்த ஆண்டு உங்களுக்கு பயணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அனுபவ சாலிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. பெரிய நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் உள்ளது. அதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel