தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Game: குரு விளையாட்டு தொடங்கிவிட்டது.. ராஜயோகம் தேடி வருகிறது.. இந்த ராசிகள் அமோகம்!

Guru Game: குரு விளையாட்டு தொடங்கிவிட்டது.. ராஜயோகம் தேடி வருகிறது.. இந்த ராசிகள் அமோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 05:40 PM IST

Lord Guru: ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

குரு விளையாட்டு தொடங்கிவிட்டது.. ராஜயோகம் தேடி வருகிறது.. இந்த ராசிகள் அமோகம்!
குரு விளையாட்டு தொடங்கிவிட்டது.. ராஜயோகம் தேடி வருகிறது.. இந்த ராசிகள் அமோகம்!

குரு பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் மே மாதம் மூன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடமாற்றினார்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து அரசுகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அபரிமிதமான செல்வம் உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் குரு நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மன உளைச்சலால் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9