தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Mars: குருவும் செவ்வாயும் சேர்ந்து விளையாடுகின்றனர்.. மகிழ்ச்சியில் பறக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru Mars: குருவும் செவ்வாயும் சேர்ந்து விளையாடுகின்றனர்.. மகிழ்ச்சியில் பறக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 04:56 PM IST

Guru Mars: செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குருவும் செவ்வாயும் சேர்ந்து விளையாடுகின்றனர்.. மகிழ்ச்சியில் பறக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
குருவும் செவ்வாயும் சேர்ந்து விளையாடுகின்றனர்.. மகிழ்ச்சியில் பறக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

குரு பகவான் ஒரு ராசியில் அமர்ந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வரக்கூடியவர். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை இவர் மாற்றுவார். இவர் ஒரு இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவான் தற்போது ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். 

இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கி கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கப்படும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல் இருந்த பரம்பரை சொத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கும். 

பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel