தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு தூக்கத்தில் இருந்து விழித்தார்.. பண படுக்கையில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது..!

குரு தூக்கத்தில் இருந்து விழித்தார்.. பண படுக்கையில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 05:33 PM IST

Lord Guru: ஜூன் மாதம் 13ம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு தூக்கத்தில் இருந்து விழித்தார்.. பண படுக்கையில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது.
குரு தூக்கத்தில் இருந்து விழித்தார்.. பண படுக்கையில் விழும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது.

Lord Guru: தேவர்களின் ராஜகுருவாக குருபகவான் புகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் செழிப்பான கிரகமாக விளங்கி வருகின்றார். மகிழ்ச்சியை அதிகமாக கொடுக்கக்கூடிய கிரகங்களில் குரு பகவானுக்கு எப்போது முக்கிய இடம் உண்டு. செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவதாக குருபகவான் விளங்கி வருகின்றார்.

குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பயணத்தை தொடங்கினால் குரு பகவான் ஒரு வருடம் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகப்பெயர்ச்சியாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 13ம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடிவரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் திருமண பாக்கியம் உண்டாகும்.

 

மிதுன ராசி

உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல யோகத்தை கொடுத்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரப்பில் இருந்த முறையில் இருக்காது. புதிதாக வேலை தொடங்கினால் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் நல்ல லாபத்தை பெற்று தரும். மன உளைச்சலால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு பலன்கள் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும்.

கடக ராசி

அதிர்ஷ்டத்தின் ஆதரவை குருபகவான் உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அபரிமிதமானது செல்வத்தின் வரவு உங்களுக்கு இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கப்படும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9