குரு புரட்டி புரட்டி வெளுக்க போகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. மாட்டிக் கொண்டது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு புரட்டி புரட்டி வெளுக்க போகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. மாட்டிக் கொண்டது யார்?

குரு புரட்டி புரட்டி வெளுக்க போகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. மாட்டிக் கொண்டது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 27, 2024 01:03 PM IST

Guru Bhagavan: ஜூன் மூன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குருபகவான் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார்.

குரு புரட்டி புரட்டி வெளுக்க போகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. மாட்டிக் கொண்டது யார்?
குரு புரட்டி புரட்டி வெளுக்க போகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. மாட்டிக் கொண்டது யார்?

இது போன்ற போட்டோக்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே இந்த ஆண்டின் மிகப்பெரிய கிரகத்தின் மாற்றமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். குருபகவான் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். 

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தலைவலியால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் உங்களுக்கு தேடி வரும். பணவரவில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டைகள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் மூலம் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் மந்தமாக இருக்கக்கூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் பத்தாவது பட்டியல் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும் கவனமாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9