தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பெயர்ச்சி 2024: ரிஷபத்தில் பணம் மழை.. அதிர்ஷ்டத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. யோகம் யாருக்கு?

குரு பெயர்ச்சி 2024: ரிஷபத்தில் பணம் மழை.. அதிர்ஷ்டத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 05:38 PM IST

Guru Peyarchi 2024: குரு பகவானின் முழுமையான ஆசீர்வாதத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

குரு பெயர்ச்சி 2024
குரு பெயர்ச்சி 2024

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற மே மாதம் முதல் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும்.

மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் தேவர்களின் குருவான குரு பகவான் நுழைவது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை தரப் போகின்றது. குறிப்பிட்டுச் செல்ல ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குரு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்பட்டுள்ளது. உங்களுடைய நண்பர்கள் மற்றும் சக உறவினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி ராசி

 

குரு பகவான் உங்களுக்காக சேர்த்து அள்ளிக் கொடுக்க போகின்றார். அதர்சத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தடைபட்டு கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

இதுவரை தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய வேலையை தொடங்குவதற்கான ஏற்ற காலம் அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மகர ராசி

 

குருபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அவ்வப்போது குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel