கதறவிட்டு கட்டி போடும் கேது.. பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. வந்துவிட்டது 2025!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கதறவிட்டு கட்டி போடும் கேது.. பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. வந்துவிட்டது 2025!

கதறவிட்டு கட்டி போடும் கேது.. பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. வந்துவிட்டது 2025!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 12, 2024 12:52 PM IST

Lord Ketu: கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

கதறவிட்டு கட்டி போடும் கேது.. பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. வந்துவிட்டது 2025!
கதறவிட்டு கட்டி போடும் கேது.. பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. வந்துவிட்டது 2025!

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கேது பகவான் நவம்பர் பத்தாம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திற்கு சென்றார். கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணமானது உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

கடக ராசி

கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கப்படும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்க கூடும். 2025 ஆம் ஆண்டு மட்டும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான செல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

சிம்ம ராசி

கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணம் ஆனது உங்களுக்கு இறைபக்தியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கக்கூடிய அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

குரு பகவானின் பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும் சேமிப்பு அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டு மட்டும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner