தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru 2024: குரு தட்டி கொட்டுவார்.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை உச்சம்

Lord Guru 2024: குரு தட்டி கொட்டுவார்.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை உச்சம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 10:39 AM IST

Lord Guru: குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணத்தை மேற்கொள்வார். இதன் மூலம் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர்.

குரு தட்டி கொட்டுவார்.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை உச்சம்
குரு தட்டி கொட்டுவார்.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை உச்சம்

Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது வருடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இந்த ராசியில் பயணம் செய்வார். இவருடைய ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணத்தை மேற்கொள்வார். இதன் மூலம் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று பெறும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெற்றுத் தரப் போகின்றது. அவருடைய ஐந்தாம் பார்வை உங்களுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9