தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Rasis That Will Benefit From The Combination Of Rahu And Mercury

2024 Luck: ராகு புதன் சேர்க்கை..3 ராசிகளுக்கு பொன் மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 03:15 PM IST

ராகு மற்றும் புதன் சேர்க்கையால் நன்மைகளை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு புதன் சேர்க்கை
ராகு புதன் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் கல்வி அறிவு பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவராக புதன் பகவான் திகழ்ந்து வருகிறார்.

ராகுபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவரோடு புதன் பகவான் இணைந்து பயணிக்கின்றார். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு மற்றும் புதன் இணைவால் எந்தந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர் என்பது குறித்து இங்கே காண்போம்.

துலாம் ராசி

 

ராகு மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்களுடைய சேர்க்கை உங்களது ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உங்களது வாய் வார்த்தையால் காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.

கும்ப ராசி

 

புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் மீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை வாரி கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.