Sani Transit: சனி நாளை முதல் வேலையை தொடங்குகிறார்.. கண்ணைக் கட்டி பணக் காட்டில் உலாவும் ராசிகள் நீங்கதான்..-here we will see about the rasis that saturn will go to the peak of the yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Transit: சனி நாளை முதல் வேலையை தொடங்குகிறார்.. கண்ணைக் கட்டி பணக் காட்டில் உலாவும் ராசிகள் நீங்கதான்..

Sani Transit: சனி நாளை முதல் வேலையை தொடங்குகிறார்.. கண்ணைக் கட்டி பணக் காட்டில் உலாவும் ராசிகள் நீங்கதான்..

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2024 10:57 AM IST

Sani Transit: சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Transit: சனி நாளை முதல் வேலையை தொடங்குகிறார்.. கண்ணைக் கட்டி பணக் காட்டில் உலாவும் ராசிகள் நீங்கதான்..
Sani Transit: சனி நாளை முதல் வேலையை தொடங்குகிறார்.. கண்ணைக் கட்டி பணக் காட்டில் உலாவும் ராசிகள் நீங்கதான்..

அதனால் அனைவரும் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் வருகின்ற ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

மேஷ ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வருமானத்தில் உயர்வு கிடைக்கும். நிதி நிலைகள் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி

சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆளுமை திறனாய் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் பழைய முதலீடுகள் உங்களுக்கு தற்போது முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான படங்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு மற்றும் மதிப்பை அதிகரித்துக் கொடுக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றம் இருக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சனி பகவானின் அருளால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்