தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Mars: குருவோடு விளையாடும் செவ்வாய்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் வந்துவிட்டது!

Lord Guru Mars: குருவோடு விளையாடும் செவ்வாய்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் வந்துவிட்டது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 01:34 PM IST

Lord Guru Mars: குரு பகவான் இங்கு பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

குருவோடு விளையாடும் செவ்வாய்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் வந்துவிட்டது!
குருவோடு விளையாடும் செவ்வாய்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் வந்துவிட்டது!

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஜூன் மாத தொடக்கத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார். 

ஏற்கனவே குரு பகவான் இங்கு பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிகப்பெரிய அளவில் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel