தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: கொட்டும் பண மழையில் சுக்கிரன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் தேடி வருகுது

Lord Venus: கொட்டும் பண மழையில் சுக்கிரன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 03:45 PM IST

Lord Venus: சுக்கிர பகவானின் கடக ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொட்டும் பண மழையில் சுக்கிரன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் தேடி வருகுது
கொட்டும் பண மழையில் சுக்கிரன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் தேடி வருகுது

Lord Venus: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல் சொகுசு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் துலாம் மற்றும் ரிஷப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

இவர் ஆடம்பர நாயகனாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதமான இந்த மாதத்தில் சந்திர பகவானின் சொந்த ராசியான கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைகின்றார்.

சுக்கிர பகவானின் கடக ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். 

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான வெற்றியை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு லாபத்தை பெற்று தரும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தின் மீது ஆதாயம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்கள் அறியப்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9