சனி நேரடி தாக்குதல்.. கொடூரமாக சிக்கிய ராசிகள்.. கண் கலங்க பண மழை கொட்டும்.. எந்த ராசி நீங்க!
Lord Shani: சனி பகவானின் வக்கிர நிவர்த்தி ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Shani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் சனி பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் எந்த நவம்பர் மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேராக பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும். இதுவரை தொழிலை சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
சக ஊழியர்களால் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நபர்களை அழைக்கின்றார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். சேமிப்பு அதிகரிக்க கூடும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். முதல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.