Luck: வாரி வாரி கொட்டும் பணமழை.. செவ்வாய் கிளம்பி விட்டார்
செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் அவருடைய பார்வை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை கொடுக்கப் போகின்றது.
பொதுவாக செவ்வாய் பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது தன்னம்பிக்கை தைரியம் மற்றும் வீரம் உள்ளிட்டவைகள் அனைத்தும் மாற்றம் அடையும். செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அவருடைய நான்காவது பார்வையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அவரால் உங்களுக்கு நல்ல வரவு கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
செவ்வாய் பகவானின் பார்வை உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்ம ராசி
சூரிய பகவானை அதிபதியாக கொண்ட உங்களுக்கு செவ்வாய் பகவான் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகின்றார். நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் .முன்பு இருந்ததை விட பன்மடங்கு தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு லாபம் இரண்டு மடங்காக கிடைக்கும் சேமிப்பு அதிகரிக்கக்கூடும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9