Guru Luck: தொட்டா தீப்பொறி பறக்கும் 3 ராசிகள்.. குரு அசைக்க விட மாட்டார்.. வேற லெவல் இந்த ராசிகள் தான்
Guru Luck: குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
குரு பகவான் மகிழ்ச்சி, அன்பு, செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடித் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைகள் உங்களுக்கு உயர்வு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கடக ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டிருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு கடுமையான போட்டி இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தின் நிறைய லாபம் கிடைக்கும். வழக்கத்தை விட உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சிறு சிறு சிக்கல்களும் உங்களை விட்டு விலகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.