Sun Transit: சனி.. சூரியன்.. சுக்கிரன்.. ஒரே இடத்தில் கொட்டும் அதிர்ஷ்டம்.. பண யோகத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit: சனி.. சூரியன்.. சுக்கிரன்.. ஒரே இடத்தில் கொட்டும் அதிர்ஷ்டம்.. பண யோகத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Sun Transit: சனி.. சூரியன்.. சுக்கிரன்.. ஒரே இடத்தில் கொட்டும் அதிர்ஷ்டம்.. பண யோகத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 01:29 PM IST

Saturn Sun and Venus: சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த இரண்டு பேரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்கள் இரண்டு பேரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். தற்போது மூன்று கிரகங்களால் ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சூரியன் சனி சுக்கிரன் மூன்று பேரும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்க உள்ளது. ராஜயோகத்தால் உங்களுக்கு பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். யோகத்தின் முழு பலனையும் நீங்கள் அனுபவிக்க போகின்றீர்கள்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சுக்கிரன் சனி ஆகிய மூன்று பேரின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வணிகம் மற்றும் வேலையில் நல்ல பலன்களை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner