Lord Transit: மாட்டிக்கிட்ட ராசிகள்.. மடக்கி போட்டு பணத்தை கொட்டும் சூரியன்.. ஜாலிலோ ஜிம்கானா தான்-here we will see about the rasis that get progress due to the blessings of lord surya - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Transit: மாட்டிக்கிட்ட ராசிகள்.. மடக்கி போட்டு பணத்தை கொட்டும் சூரியன்.. ஜாலிலோ ஜிம்கானா தான்

Lord Transit: மாட்டிக்கிட்ட ராசிகள்.. மடக்கி போட்டு பணத்தை கொட்டும் சூரியன்.. ஜாலிலோ ஜிம்கானா தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 11, 2024 11:57 AM IST

Lord Transit: சூரிய பகவானின் மகம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

மாட்டிக்கிட்ட ராசிகள்.. மடக்கி போட்டு பணத்தை கொட்டும் சூரியன்.. ஜாலிலோ ஜிம்கானா தான்
மாட்டிக்கிட்ட ராசிகள்.. மடக்கி போட்டு பணத்தை கொட்டும் சூரியன்.. ஜாலிலோ ஜிம்கானா தான்

சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி அன்று மகம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். கேது மற்றும் சூரியன் எதிரி கிரகங்களாக திகழ்ந்து வந்தாலும் சூரிய பகவானின் மகம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

மிதுன ராசி

சூரிய பகவானின் மகம் நட்சத்திர பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழும் இந்த நட்சத்திர பயணம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பண வரவில் இருந்து குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

சூரிய பகவானின் மகம் நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் நிகழ உள்ள காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வருமானம் உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். 

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாக மாறும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிக ராசி

சூரிய பகவானின் மகம் நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

உயர் அலுவலர்களின் மூலம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மறக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்