தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி இஷ்டமான ராசிகள் இவர்கள்தான்.. ஏழரை வந்தாலும் பணமழை கொட்டுவார்.. எப்போதும் நெருக்கமாக இருப்பீர்கள்..!

சனி இஷ்டமான ராசிகள் இவர்கள்தான்.. ஏழரை வந்தாலும் பணமழை கொட்டுவார்.. எப்போதும் நெருக்கமாக இருப்பீர்கள்..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2024 11:08 AM IST

Lord Saturn: சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை அனைத்து ராசிகளுக்கும் நிகராக கொடுத்தாலும் ஒரு சில ராசிகளின் மீது அவருடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்தாலும் குறைவான பாதகத்தை கொடுப்பார்.

சனி இஷ்டமான ராசிகள் இவர்கள்தான்
சனி இஷ்டமான ராசிகள் இவர்கள்தான்

சனி ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகத்தையும் அள்ளிக் கொடுப்பார். கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை அனைத்து ராசிகளுக்கும் நிகராக கொடுத்தாலும் ஒரு சில ராசிகளின் மீது அவருடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரைசனி நடந்தாலும் குறைவான பாதகத்தை கொடுப்பார். அந்த வகையில் சனிபகவானுக்கு பிரியமான ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் அருளாசி உங்களுக்கு எப்போதும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாக உங்களை மாற்றுவார். தனக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு கொடுக்கும். எண்ணம் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் பிறருக்கு உதவும் எண்ணத்தால் சனி பகவான் உங்களுக்கு எப்போதும் நன்மைகளை செய்வார். அதன் காரணமாக சனி பகவானுக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவராக இருந்து வருகிறீர்கள்.

துலாம் ராசி

 

அனைத்து தெய்வத்திற்கும் பிடித்த ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். சனி பகவானின் விருப்பமான ராசிகளில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்போதும் கருணை எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்ற காரணத்தினால் சனிபகவான் உங்களுக்கு ஆசிர்வாதத்தை கொடுப்பார். அவருக்கு பிடித்த ராசி என்கின்ற காரணத்தினால் மற்றவர்களுக்கு நீங்கள் எப்போதும் உதவி செய்து கொண்டிருப்பீர்கள்.

மகர ராசி

 

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவராக இருந்து வருகின்றீர்கள். உங்களுக்கு எப்போதும் பாதகமான விளைவுகள் ஏற்படுவது கிடையாது. உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் உங்களுடைய ராசியில் சுப லக்னத்தில் இருக்கும் பொழுது உங்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும். எல்லா துறைகளிலும் சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுப்பார்.

கும்ப ராசி

 

சனி பகவான் தற்போது உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவருடைய சொந்தமான ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் சனி பகவான் நன்மைகளை செய்வார். எத்தனை பெரிய கண்டங்கள் ஏற்பட்டாலும் அது சனி பகவானால் நிவர்த்தி செய்யப்படும். உங்களுக்கு பாதகங்கள் வருவதை சனி பகவான் குறைத்து விடுவார், ஏனென்றால் அவருக்கு பிடித்தமான ராசிகளில் நீங்களும் ஒருவர். சனி பகவான் ஒரே ராசியில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் அவருடைய தாக்கங்களும் அதிகமாக கட்டாயம் இருக்கும். இருப்பினும் சனி பகவான் உங்களுக்கு நன்மைகளை செய்வார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel