குடம் குடமாய் கொட்டும் குரு.. வாரி கொள்ள தயாராகும் ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குடம் குடமாய் கொட்டும் குரு.. வாரி கொள்ள தயாராகும் ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதி

குடம் குடமாய் கொட்டும் குரு.. வாரி கொள்ள தயாராகும் ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Oct 22, 2024 06:02 PM IST

Lord Guru Bhagavan: குருபகவான் வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் உன் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குடம் குடமாய் கொட்டும் குரு.. வாரி கொள்ள தயாராகும் ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதி
குடம் குடமாய் கொட்டும் குரு.. வாரி கொள்ள தயாராகும் ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதி

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். குருபகவான் வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் உன் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கப்படும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். தொழிலில் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.