தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani 2024: சனி சக்கையடி கொடுக்கப் போகிறார்.. திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. கட்டி வைத்து அடிப்பது உறுதி!

Sani 2024: சனி சக்கையடி கொடுக்கப் போகிறார்.. திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. கட்டி வைத்து அடிப்பது உறுதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 12:48 PM IST

Sani 2024: சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது வருகின்ற நவம்பர் மாதம் வரை தொடரும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி சக்கையடி கொடுக்கப் போகிறார்.. திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. கட்டி வைத்து அடிப்பது உறுதி!
சனி சக்கையடி கொடுக்கப் போகிறார்.. திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. கட்டி வைத்து அடிப்பது உறுதி!

சனி பகவான் சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

அந்த வகையில் சனி பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது வருகின்ற நவம்பர் மாதம் வரை தொடரும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சிறிய வேலைகளில் கூட பெரிய தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் கடின உழைப்புக்கு வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். 

வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். தொழிலில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாக்குவாதம் வாழ்க்கைத் துணையோடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் உங்களுக்கு மோசமான சூழ்நிலை இருக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகவும் எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாக வேலைகளில் உங்களுக்கு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் கடினமான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

மோசமான வாழ்க்கை முறை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதிக கவனம் எடுத்து உங்கள் உடல்நிலை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். நவம்பர் மாதம் வரை உங்களுக்கு கடினமான சூழ்நிலை இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். தேவையில்லாத இடத்தில் நீங்கள் தலையிடுவது சிறந்தது அல்ல.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9