தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Angaraka Yoga: அடாவடி தூக்குத் துரை ராசிகள்.. செவ்வாய் முடிவுக்கு கொண்டு வந்த அங்காரக யோகம்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்

Angaraka Yoga: அடாவடி தூக்குத் துரை ராசிகள்.. செவ்வாய் முடிவுக்கு கொண்டு வந்த அங்காரக யோகம்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 11:42 AM IST

Angaraka Yoga: ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் அசுப யோகமாக விளங்கிய அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

அடாவடி தூக்குத் துரை ராசிகள்.. செவ்வாய் முடிவுக்கு கொண்டு வந்த அங்காரக யோகம்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்
அடாவடி தூக்குத் துரை ராசிகள்.. செவ்வாய் முடிவுக்கு கொண்டு வந்த அங்காரக யோகம்.. இந்த ராசிகளுக்கு ஜாலிதான்

Angaraka Yoga: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு முன்பாக மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது ராகு பகவானோடு சேர்ந்து செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார் இதன் காரணமாக அங்காரக யோகம் உருவாகி இருந்தது.