Money Luck: பணத்தை தலை மீது கொட்டும் ராகு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. யோகக்காரர் தான் நீங்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பணத்தை தலை மீது கொட்டும் ராகு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. யோகக்காரர் தான் நீங்கள்

Money Luck: பணத்தை தலை மீது கொட்டும் ராகு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. யோகக்காரர் தான் நீங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 24, 2024 01:48 PM IST

Lord Rahu: ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செஞ்சாரம் செய்ய உள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

பணத்தை தலை மீது கொட்டும் ராகு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. யோகக்காரர் தான் நீங்கள்
பணத்தை தலை மீது கொட்டும் ராகு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. யோகக்காரர் தான் நீங்கள்

இது போன்ற போட்டோக்கள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான் எப்போதும் தீமைகளை செய்யக்கூடிய கிரகமாக இருப்பதில்லை. இருக்கும் இடத்தை பொறுத்து சில நேரங்களில் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுப்பார். ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செஞ்சாரம் செய்ய உள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்ட ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல யோகம் இருக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கும்ப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. செலவுகள் அதிகரித்தாலும் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய மாற்றங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9