தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி பொட்டு வைத்துவிட்டார்.. இனி புரட்டாமல் விடமாட்டார்.. பண மழையில் சிக்கிய ராசிகள்

சனி பொட்டு வைத்துவிட்டார்.. இனி புரட்டாமல் விடமாட்டார்.. பண மழையில் சிக்கிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 07, 2024 09:57 AM IST

Transit of Saturn: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்த நட்சத்திரமாகும்.

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபத்தை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேதி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாள் நோய் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகளை தேடி வரும்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற்று கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். அனைத்து காரியத்திலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள் உடன் பிறந்தவர்களால் முன்னேற்றம். கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel