தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Yoga: வசூலை அள்ளிக் குவிக்கும் ராகு.. பணத்தில் குதிக்கும் ராசிகள். விளையாட்டு ஆரம்பம்..

Money Yoga: வசூலை அள்ளிக் குவிக்கும் ராகு.. பணத்தில் குதிக்கும் ராசிகள். விளையாட்டு ஆரம்பம்..

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 05:14 PM IST

Money Yoga: ஜூலை மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ராகு பகவான் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வசூலை அள்ளிக் குவிக்கும் ராகு.. பணத்தில் குதிக்கும் ராசிகள். விளையாட்டு ஆரம்பம்..!
வசூலை அள்ளிக் குவிக்கும் ராகு.. பணத்தில் குதிக்கும் ராசிகள். விளையாட்டு ஆரம்பம்..!

Money Yoga: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசிகள் நுழைந்தார். இந்த ராசியில் இந்த ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்.