தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு நெருங்கிவிட்டார்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் தவறி விழுந்த ராசிகள்

Lord Guru: குரு நெருங்கிவிட்டார்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் தவறி விழுந்த ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 02:04 PM IST

Lord Guru: மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குரு பகவான். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். அதன் பிறகு இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். இந்நிலையில் குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

குரு நெருங்கிவிட்டார்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் தவறி விழுந்த ராசிகள்
குரு நெருங்கிவிட்டார்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் தவறி விழுந்த ராசிகள்

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குரு பகவான். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார். அதன் பிறகு இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். இந்நிலையில் குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் திருமண வாழ்க்கை உங்களுக்கு இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்பை இருந்ததை விட சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நலியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தந்தையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முழுவதுமாக குறையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததை விட சிறப்பாக படிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகும். செல்வம் பெருகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9