Guru Mass: தலைகீழாக பணத்தைக் கொட்டும் குரு.. இன்பக் கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வருது-here we will see about the rasis in which guru bhagavan gets raja yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Mass: தலைகீழாக பணத்தைக் கொட்டும் குரு.. இன்பக் கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வருது

Guru Mass: தலைகீழாக பணத்தைக் கொட்டும் குரு.. இன்பக் கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வருது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 03:02 PM IST

Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாக உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தலைகீழாக பணத்தைக் கொட்டும் குரு.. இன்பக் கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வருது
தலைகீழாக பணத்தைக் கொட்டும் குரு.. இன்பக் கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் இவர்களுக்கு தேடி வருது

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த ஆண்டு பெரிதாக முக்கிய கிரகங்களின் இடமாற்றம் எதுவும் நடக்கவில்லை. குரு பகவான் மட்டுமே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது விமர்சையாக அனைத்து குரு பகவான் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது.

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் மே ஒன்றாம் தேதியும் இடமாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆனார். அஸ்தமன நேரத்தில் அனைத்து கிரகங்களின் பலன்களும் சற்று மந்தமாக இருக்கும். 

ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாக உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் உதயம் ஆகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு வேலை மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

ஜூன் மாதத்தில் இருந்து வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9