தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Siva: சிவனுக்கு நெருக்கமான ராசிகள் இவர்கள்தான்.. தொட்டால் தெரியும் இவர்கள் யார் என்று.. அதிர்ஷ்டக்காரர்கள்

Lord Siva: சிவனுக்கு நெருக்கமான ராசிகள் இவர்கள்தான்.. தொட்டால் தெரியும் இவர்கள் யார் என்று.. அதிர்ஷ்டக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 04:48 PM IST

Lord Siva: ஒரு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிவ பெருமானின் ஆசிர்வாதம் சிறப்பாக கிடைக்கும். அந்த வகையில் சிவ பெருமான் ஆசிர்வாதத்தை நேரடியாக பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சிவனுக்கு நெருக்கமான ராசிகள் இவர்கள்தான்.. தொட்டால் தெரியும் இவர்கள் யார் என்று.. அதிர்ஷ்டக்காரர்கள்
சிவனுக்கு நெருக்கமான ராசிகள் இவர்கள்தான்.. தொட்டால் தெரியும் இவர்கள் யார் என்று.. அதிர்ஷ்டக்காரர்கள்

Lord Siva: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்தால் ஆளப்படுகிறது அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப 12 ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள்.

நவகிரகங்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாது பல்வேறு விதமான கடவுளுக்கு மிகவும் இணக்கமான ராசிகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ராசிகளும் பல தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் ஒரு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் சிறப்பாக கிடைக்கும். அந்த வகையில் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை நேரடியாக பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானால் ஆளப்படக் கூடியவர்கள் நீங்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். குறிப்பாக தலைமை பண்பு அதிகமாக இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் அதிக ஆர்வம் காட்டி லட்சியத்தில் நேராக பயணிக்க கூடியவர்கள். அதன் காரணமாக சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு சிறப்பாக எப்போதும் கிடைக்கும். 

திட்டம் தீட்டு இலக்குகளுக்காக தடைகளை தாண்டி பயணம் செய்யக்கூடிய ஆசீர்வாதம் சிவபெருமான் உங்களுக்கு எப்போதும் கொடுப்பார். விருப்பங்கள் நிறைவேறக்கூடிய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அதனால் உங்களை யாரும் நெருங்குவது அவ்வளவு எழுதி கிடையாது.

கடக ராசி

சந்திர பகவானால் ஆளப்படக் கூடியவர்கள் நீங்கள் உங்களுக்கு உணர்ச்சி உணர்வு திறன் மற்றவர்கள் மீது அக்கறை எப்போதும் இயல்பிலேயே இருக்கும். இந்த அடையாளத்தின் கீழ் நீங்கள் இருக்கின்ற காரணத்தினால் உள்ளுணர்வுகள் மூலம் எப்போதும் வலிமையாக இருப்பீர்கள். சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்கள் உணர்ச்சி எப்போதும் நிலையான தன்மையோடு இருக்கும். 

உள் மனது எப்போதும் அமைதியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் எப்போதும் அதிகமாக இருக்கும். சிவபெருமான் மீது தனி அன்பு கொண்ட உங்களுக்கு அவருடைய ஆசீர்வாதம் தனிச்சிறப்பாக எப்போதும் கிடைக்கும். உங்களது அன்பிற்குரிய அவர்களோடு நீங்கள் எப்போதும் பிணைப்பாக செயல்பட கூடியவர்கள்.

சிம்ம ராசி

சூரிய பகவானால் ஆளப்படும் ராசிக்காரர்கள் நீங்கள். உங்களுக்கு நம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் எப்போதும் அதிகமாக இருக்கும். தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு தலைமை பண்பு உச்சத்தில் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சூரிய பகவானால் உங்களுக்கு அனுகிரகம் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அதைவிட இரண்டு மடங்காக சிவபெருமானால் உங்களுக்கு கிடைக்கும். 

சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எதிர்கொண்ட காரியங்களில் எப்போதும் வெற்றி கிடைக்கும். இடத்தில் தலைமை தாங்கும் உரிமை உங்களுக்கு எப்போதும் சிவபெருமான் கொடுப்பார். உங்களை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்க விட முடியாது. எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி காண்பது எப்போதும் உறுதியாகும் அதற்கு காரணம் சிவபெருமான்தான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9