தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: கோடீஸ்வரராக மாற்றப் போகும் செவ்வாய்.. படத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

Lord Mars: கோடீஸ்வரராக மாற்றப் போகும் செவ்வாய்.. படத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 01:48 PM IST

Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.

கோடீஸ்வரராக மாற்றப் போகும் செவ்வாய்.. படத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?
கோடீஸ்வரராக மாற்றப் போகும் செவ்வாய்.. படத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார்.

ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். எடுத்த காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உணவு தொடர்பான வேலைகள் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சத்துக்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு பிடிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel