தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: தாறுமாறாக கொட்டும் குரு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உங்க ராசிக்கு யோகம் வருது

Lord Guru: தாறுமாறாக கொட்டும் குரு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உங்க ராசிக்கு யோகம் வருது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 12:55 PM IST

Guru Bhagavan: குரு பகவான் ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இந்த மாதம் தொடக்கத்தில் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது.

தாறுமாறாக கொட்டும் குரு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உங்க ராசிக்கு யோகம் வருது
தாறுமாறாக கொட்டும் குரு.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உங்க ராசிக்கு யோகம் வருது

Guru Bhagavan: நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.