Lord Kubera: குபேரனின் ஆசி மழையில் நனையும் ராசிகள்
குபேர பகவானின் ஆசி பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
செல்வத்தின் அதிபதியாக குபேர பகவான் விளங்கி வருகிறார். செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவான் அனைவருக்கும் செல்வங்களை வாரி கொடுக்கக் கூடியவர்.
12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக விளங்கும் அந்த கிரகங்களின் அருள் ஆசி எப்போதும் அந்தந்த ராசிகளுக்கு இருக்கும் அந்த வகையில் குபேர கடவுளின் ஆசி பெற்ற சில ராசிகள் உள்ளனர் அந்த ராசிகளுக்கு எப்போதும் அவர் தனது அருளாசியை கொடுப்பார்.
செல்வத்தில் மட்டுமல்லாது அறிவிலும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் குபேர பகவானின் அருளாசி பெற்ற நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
துலாம் ராசி
குபேர பகவானால் ஆசி பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர். அவருக்கு மிகவும் பிடித்தமான ராசிக்காரர்களான உங்களுக்கு எப்போதும் பணவரவில் இந்த குறையும் இருக்காது. எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பீர்கள்.
கடக ராசி
நீங்கள் புத்தி கூர்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். ஒருவேளை முடிந்த பின்னரே அடுத்த வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். திட்டமிட்ட இலக்கில் விடாப்படியாக பயணம் செய்யக் கூடியவர்கள் நீங்கள். எப்போதும் பணம் சேர்ப்பதில் குறிக்கோளாக இருப்பீர்கள். குபேர பகவானின் அருளாசி உங்களுக்கு இருப்பதால் செல்வத்தில் எந்த குறையும் இருக்காது.
விருச்சிக ராசி
நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள் கவனத்துடன் வேலை செய்து திட்டத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஏனென்றால் குபேரனின் ஆசி உங்களுக்கு உள்ளது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகர ராசி
பிறப்பிலேயே நீங்கள் பணக்கார ராசியாக இருப்பீர்கள். கடின உழைப்பால் அனைத்து இடத்தையும் உங்களுக்கு ஏற்றவாறு தக்க வைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். லட்சுமிதேவி மற்றும் குபேரனின் அருள் உங்களுக்கு எப்போதும் உள்ளதால் உங்களுக்கு பணத்தில் இந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9