பண சிக்கலை கொடுக்கும் சுக்கிரன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது கஷ்டம் தான்..!-here we will see about the rasis associated with lord venus - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண சிக்கலை கொடுக்கும் சுக்கிரன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது கஷ்டம் தான்..!

பண சிக்கலை கொடுக்கும் சுக்கிரன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது கஷ்டம் தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2024 11:12 AM IST

Lord Venus: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சில ராசிகளுக்கு இவருடைய இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் சனி பகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.

மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சில ராசிகளுக்கு இவருடைய இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சுக்கிரனால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் உங்களுக்கு அவமானம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் தேவையில்லாத பழியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை கொடுப்பார்கள். பணம் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவினர்களோடு சற்று தண்ணீர் இருப்பத நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9