தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி புரட்டி எடுக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Sani: சனி புரட்டி எடுக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 10:42 AM IST

Saturn: சனிபகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணித்து வருகின்றார் இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டு தான் தனது இடத்தை மாற்றப் போகிறார்.

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கும். அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் நுழைகின்றார். இவருடைய இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் சற்று மந்த சூழ்நிலை ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி

 

இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணங்கள் செய்வது மிகவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் தொழிலில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. பல சிந்தனைகளால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

சனிபகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு வேதனையை கொடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்