தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு தூக்கி எறிவது உறுதி.. கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. முரட்டு அடி உறுதியானது.. உங்க ராசி என்ன?

குரு தூக்கி எறிவது உறுதி.. கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. முரட்டு அடி உறுதியானது.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2024 12:24 PM IST

Guru: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனமானார்.

குரு தூக்கி எறிவது உறுதியானதால் கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்
குரு தூக்கி எறிவது உறுதியானதால் கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனமானார்.

அஸ்தமனத்தில் கிரகங்கள் பயணம் செல்லும் பொழுது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனத்தில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கும் வேண்டும். 

வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர்ந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் எட்டாபதி வீட்டில் குரு அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கடன் வாங்க வேண்டிய தருணங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களால் அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மீன ராசி

 

குரு உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் நடைபெறுவதற்கு சட்ட தாமதமாகவும் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்களில் ஏற்படும் எந்த முடிவு எடுத்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel