தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டப்படப் போகும் ராசிகள். சுக்கிரனின் மோசமான பயணம்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

கஷ்டப்படப் போகும் ராசிகள். சுக்கிரனின் மோசமான பயணம்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 02:22 PM IST

Lord Venus: மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருவதால் ஒரு சில ராசிகளுக்கு பண சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சிக்கல்களை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிரன்
சுக்கிரன்

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு கஷ்டம் கிடைக்கும்.

தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருவதால் ஒரு சில ராசிகளுக்கு பண சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சிக்கல்களை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வெற்றி சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு தொல்லைகள் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காரியத்தில் தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளையும் வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வீண் பழி உங்கள் மீது விழும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொண்டால் நன்மையாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel