தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு உங்க ராசிக்கு என்ன செய்யப் போகிறார்.. பணமழை யாருக்கு?.. விரட்டும் கஷ்டம் யாருக்கு.. வாங்க பார்க்கலாம்!

குரு உங்க ராசிக்கு என்ன செய்யப் போகிறார்.. பணமழை யாருக்கு?.. விரட்டும் கஷ்டம் யாருக்கு.. வாங்க பார்க்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 04:01 PM IST

Guru Peyarchi 2024: குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்திய காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

இந்த 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரகங்கள் எதுவும் தங்களது இடத்தை மாற்றவில்லை. ஆனால் நவகிரகங்களில் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்தார். இது குரு பகவான் ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்திய காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தொழில் ரீதியான முக்கிய மாற்றங்கள் உண்டாகும். குரு பகவானால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

மிதுன ராசி 

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்கினால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மிகப்பெரிய மாற்றம் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெட்ரோலின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel