தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Merits Of Guru Bhagavan Who May Reside In Alangudi

HT Yatra: தோஷங்கள் போக்கும் குரு.. குறைகளை தீர்க்கும் ஆபத்சகாயேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 26, 2024 06:00 AM IST

ஆலங்குடியில் வீற்றிருக்கக் கூடிய குரு பகவானின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரர்
அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் ஆலங்குடியில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலின் மூலவராக ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் விளங்கி வருகிறார். ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் குரு பகவான் தொழில் சன்னதியில் அமர்ந்து பக்தர்களின் தோஷங்களை போக்கி வருகிறார்.

இந்த திருத்தலம் குருதட்சணாமூர்த்தியின் திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த தளத்தில் தவம் இருந்து அம்பிகை சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. தேவாரப் பாடலில் இடம் பெற்ற 274 சிவபெருமான் கோயில்களில் இது 161வது தலமாக விளங்கி வருகிறது.

இந்த திருத்தலத்திற்கு சுந்தரர் வரும்பொழுது வெட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிவபெருமான் வந்து ஓடக்காரர்கள் போல் காட்சி கொடுத்துள்ளார் என புராணங்களில் கூறப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய ஏலவார்குழலி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது இவர் சுக்கிரவார அம்பிகை என அழைக்கப்படுகிறார்.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் குரு பகவான் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த குருபகவானுக்கு மாசி மாதத்தில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. குரு பெயர்ச்சி நாள் இங்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சனகாதி முனிவர்களுக்கு குரு தட்சணாமூர்த்தி குருவாக இருந்து உபதேசம் செய்துள்ளார்.

இந்த கோயிலில் குருபகவான் சிறப்பு கடவுளாக போற்றப்பட்டு வருகிறார். இவரை வணங்கினால் அனைத்து வித சிறப்புகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த தலத்தில் வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் இடமும் கூறப்படுகிறது.

தல வரலாறு

சுவாசனன் என்ற மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்துள்ளான். அவருடைய அக்கிரமங்களை தாங்க முடியாத மற்ற மன்னர்கள் சேர்ந்த அவரை கொன்று விட்டனர். பின்னர் எமலோகம் சென்றுள்ளார். அங்கே அவருடைய பாவங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டது. இவர் கொடுங்கோல் ஆட்சி செய்த காரணத்தினால் பூமியில் பேயாக அலைய வேண்டும் என விதி இருப்பதால் இவர் அப்படியே இருக்க வேண்டும் என கூறியுள்ளார் எமதர்மன்.

அதன் காரணமாக மன்னன் இந்த பூலோகத்தில் பேயாக தெரிந்துள்ளார். அவருடைய முன் ஜென்மத்தில் செய்த நன்மைகளால் அகத்திய முனிவரை சந்தித்துள்ளார். ஆலங்குடியில் வீற்றிருக்கக்கூடிய ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டால் உனது பாவங்கள் போகும் என அகத்தியர் கூறியுள்ளார். உடனே அங்கு சென்று சிவபெருமானை வழிபட்டு தனது பாவங்களை போக்கி இழந்த அனைத்தையும் சுவாசனன் பெற்றுள்ளார்.

பயண வசதி

 

இந்த திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ளது கும்பகோணத்தில் இருந்து இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன மேலும் திருவாரூர் மாவட்டத்திலிருந்தும் இந்த கோயிலுக்கு பேருந்துகள் உள்ளன. கும்பகோணம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு விடுதி மற்றும் தங்குமிடம் வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.