தமிழ் செய்திகள்  /  Astrology  /   Here We Will See About The Horoscope For March 26

Today Rasi Palan : மார்ச் 26 - கடன் சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கு!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 26, 2023 05:30 AM IST

மார்ச் 26 ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடுமையாக முயற்சி செய்து மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலை முன்னேற்றக் கடுமையான உழைப்பு தேவை. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மனக்கவலை நீங்கும். பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ரிஷப ராசி

சொத்துக்களைப் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தொழிலுக்குத் தேவையான கடன் உதவி கிடைக்கும். சொத்து சிக்கல்கள் தீரும். தொழிலில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். உறவினர்களால் எந்த உதவியும் கிடைக்காது. வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது.

மிதுன ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களது பேச்சுக்கு மரியாதை கூடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் தீரும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கடக ராசி

தொழிலில் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்குச் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மனைவியை இன்பமாக வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

வியாபார எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியம் செயல்படச் சற்று தாமதமாகும், அதனால் மனக்கவலை ஏற்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

வியாபாரத்தை பொறுத்தளவில் அவசரப்பட வேண்டாம், பொறுமையாகச் செயல்படுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிக்கல்கள் ஏற்படும், பொருளாதாரம் சுமாராக இருக்கும். எதுவாக இருந்தாலும் படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுங்கள். எச்சரிக்கையாக இருங்கள் கவனம் தேவை.

துலாம் ராசி

நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், உங்கள் வியாபாரத்தில் பண மழைதான். புதிய முயற்சிகளால் தொழில் விருத்தியாகும், பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு குறைய வாய்ப்புள்ளது. உங்களைத் தேடி வந்த தடைகள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி

உறவினர்களிடம் சுமுகமான உறவு ஏற்படும், பிரச்சனைகளை எளிதாகச் சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும், தேவையற்ற வீண் கவலைகளைக் கண்டுகொள்ள வேண்டாம்.

தனுசு ராசி

கடன் சிக்கல்கள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொகையைத் திருப்பித் தர வேண்டும். சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் இறங்க வேண்டாம்.

மகர ராசி

எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி

வெளியூர் பயணங்களால் பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மொத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக நகை, வீடு, வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் தீரும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்களது வளர்ச்சி இருக்கும். சொத்து சிக்கல்கள் தீரும்.

மீன ராசி

வியாபாரம் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். சிக்கல்கள் தீரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்