Today Rasi Palan : மார்ச் 19 தேவையில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்..ஏமாற்றம் தான்!
மார்ச் 19ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
ட்ரெண்டிங் செய்திகள்
எடுத்த காரியத்தை முடிக்க முனைப்பாகச் செயல்படுவீர்கள், வெளியூர் பயணம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷப ராசி
புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. உங்களது திறமையால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மிதுன ராசி
பண சிக்கல்கள் தீரும். ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் தீரும். கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கடக ராசி
நீண்ட கால ஆசை நிறைவேறும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் அன்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி
மருத்துவமனையில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தள்ளிப்போகும். . வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படும். பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
கன்னி ராசி
குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும். மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருக்கும் சிக்கல்களை தவிர்த்துவிடுங்கள். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் கூடும்.
துலாம் ராசி
வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணம் செய்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிக ராசி
தேவையில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி
குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். மற்றவர்களின் வேலையில் தலையிடாதீர்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
மகர ராசி
தேவையில்லாத பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழில் சார்ந்த விஷயங்கள் மந்தமாக இருக்கும். விருப்பங்கள் கைகூடும், குடும்பத்தில் மங்கள காரியம் நடக்க உள்ளது.
கும்ப ராசி
மற்றவர்கள் தீமைகள் செய்தாலும் நீங்கள் நன்மை செய்வீர்கள். உங்கள் அருமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
மீன ராசி
புதிதாக யாரிடமாவது பழகினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பிற்குப் பிறகு கடன் சிக்கல்கள் தீரும்.