Today Rasi Palan: உங்கள் அருமை மற்றவர்களுக்கு தெரியாது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: உங்கள் அருமை மற்றவர்களுக்கு தெரியாது!

Today Rasi Palan: உங்கள் அருமை மற்றவர்களுக்கு தெரியாது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 14, 2023 05:30 AM IST

பிப்ரவரி 14 ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

இது போன்ற போட்டோக்கள்

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். முடியாதவர்களுக்குத் தேடிச்சென்று உதவுவீர்கள். உங்களுடைய அந்தஸ்து உயரும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிதாக வீடு கட்டுவீர்கள்.

ரிஷப ராசி

செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். குழந்தைகளுக்காக மருத்துவச் செலவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும்.

மிதுன ராசி

மற்றவர்கள் தீமைகள் செய்தாலும் நீங்கள் நன்மை செய்வீர்கள். உங்கள் அருமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும், தொழிலில் மந்தம் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களால் ஏமாற்றப் படுவீர்கள். பல நாள் கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.

கடக ராசி

தடுக்கி விழும் நேரத்தில் உங்கள் மனைவி காப்பாற்றுவார். தேவையான நேரத்தில் உங்கள் சேமிப்பு பணம் உதவும். சொத்து வில்லங்கங்கள் நீங்கும். உதவிகள் உங்களைத் தேடி வரும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி

சொத்து சிக்கல்கள் தீரும். மருத்துவமனை செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடினமான அலைச்சலுக்குப் பிறகு நினைத்த காரியம் முடியும். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் அது அவசியமான செலவாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சித்தர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும்.

கன்னி ராசி

பெரியோர்கள் ஆலோசனையால் நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல வருமானத்திற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

துலாம் ராசி

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களிடம் பழகும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய முயற்சிகள் கைகூடும். தேவையில்லாத பழக்கவழக்கங்களையும் நிறுத்துங்கள்.

விருச்சிக ராசி

தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. சிந்தனையை மாற்றும் தவறான விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு ராசி

பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும், வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதன் மூலமாகச் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும், வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள், நீங்கள் தொட்ட இடமெல்லாம் பொன்னாகும்.

மகர ராசி

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உதவிகள் தானாகத் தேடி வரும், இதுவரை மந்தமாக இருந்த உங்களது தொழில் சிறப்பாக மாறும். இருக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள், அதிக ஆசை வேண்டாம் பின்வரும் காலங்களில் அது பிரச்சினையை ஏற்படுத்தும். வியாபாரம் விருத்தியாகும், சிறுதொழில் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள்.

கும்ப ராசி

உங்களது வீட்டில் சுப காரியங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது, திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதுவரை பிரச்சனையாக இருந்த குடும்பச் சூழல், மகிழ்ச்சியாக மாறும், கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், வெளியூரில் தங்க வேண்டிய அவசியம் ஏற்படும், மனதை அலைபாயாமல் வைத்திருங்கள். உங்களது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

மீன ராசி

வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும், கடினமாக உழைத்தாலும் தொழிலில் லாபம் பெற வாய்ப்பில்லை. செலவு செய்வதில் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் வியாபாரமோ, தொழிலோ மந்தமான நிலையிலேயே செல்லும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை, எனவே எச்சரிக்கையாக இருங்கள்.