HT Yatra: வாழை மரமாக அருள் பாலிக்கும் முருக பெருமான்.. பக்தனுக்காக வந்த சுப்ரமணியன்
வாழை மர பாலசுப்பிரமணியம் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
தமிழ் கடவுகளாக போற்றப்பட்டு வரக்கூடியவர் முருகப்பெருமான். தமிழ்நாட்டில் அறுபடை வீடு கொண்டு தமிழ் மக்கள் அனைவரையும் ஆட்சி செய்து வருகிறார். பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல மாவட்டங்களில் கோயில் கொண்டு மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார் முருகப் பெருமான்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே வித்தியாசமான பெயரில் குடிகொண்டு முருகப்பெருமான் அருள் பாதித்து வருகிறார். அந்த முருகனின் பெயர் வாழை மர சுப்ரமணியசுவாமி. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமான் வாழை மர வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தல வரலாறு
துலுக்கன்குறிச்சி என்ற கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு வேலாயுதம் என்று ஒரு மகன் இருந்தார் அன்றாடம் விவசாய பணிகளை செய்து வந்த இவர் தினமும் அதிகாலை நேரத்தில் வைப்பாற்றில் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அங்கு அருகே வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோயிலில் இருந்த முருகனை வழிபடுவது இவரது வழக்கம்.
ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்றில் வெள்ளம் வந்துள்ளது கரையை கடக்க முடியாமல் வேலாயுதம் திணறி வந்துள்ளார் இறைவனை தரிசிக்க முடியாத காரணத்தினால் வருத்தத்தோடு வீட்டிற்கு வந்துள்ளார் மன வேதனை காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார். அதே வருத்தத்தோடு படுத்து உறங்கி உள்ளார். அப்போது கனவில் இறைவன் தோன்றி என்னைக்காக நீ வர தேவையில்லை, நானே உன்னை தேடி வருகிறேன்.
நீ விவசாயம் செய்து வைத்திருக்கக்கூடிய வாழை மர தோட்டத்தில் ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் நான் இருக்கிறேன் என கூறிவிட்டு மறைந்துள்ளார். அதன் பின்னர் மறுநாள் காலையில் எழுந்து வேலை விதம் கழித்து விட்டு வாழை தோப்பிற்கு சென்று பார்த்த போது கனவில் கூறியது போலவே தனியாக வாழைமரம் இருந்துள்ளது. அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார். இந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவி பொதுமக்கள் அனைவரும் வாழை மரத்தை தேடி வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர்.
இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உண்டாகும் எனவும், விஷக்கடி, தீரா நோய்கள் அனைத்தும் அகலும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வாழை மரமாக இங்கு வீற்றிருக்கும் முருக பெருமானை வழிபட்டால் குலம் தழைக்கும் என கூறப்படுகிறது.
இந்த கோயிலில் முருக பெருமான் வாழைமரமாக வீழ்ச்சி இருந்து பக்தர்களுக்கு அருள் பாதிப்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
அமைவிடம்
இந்த கோயில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சி என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல சிவகாசியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9