HT Yatra: மன்னனின் நோயை போக்கியவர்.. காலம் கடந்து வாழும் சிவபெருமான்.. அருள் மழை பொழிyuம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர்
Temple: தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த சிறப்புமிக்க திருக்கோயில்களில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஒன்று. இந்த திருக்கோயில் தென் பகுதியில் காளகஸ்தி கோயில் என அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்னகத்தே வைத்துள்ளவர் சிவபெருமான். உலகம் முழுவதும் அதிக கோயில்களை கொண்ட இறைவனாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார். அன்பை அடிப்படையாகக் கொண்டு போற்றப்படும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கென பல கோயில்கள் உள்ளன. அந்த கோயில்கள் அனைத்தும் தனக்கென தனி சிறப்புகளைக் கொண்டு விளங்கி வருகின்றன. இந்தியாவில் தெற்கு பகுதியை ஆட்சி செய்து வந்த அனைத்து மன்னர்களும் சிவபெருமானுக்கு பக்தராக இருந்து வந்துள்ளனர்.
அப்படி தனி சிறப்பு கொண்டு விளங்கக்கூடிய கோவில்களில் ஒன்றுதான் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கும்பகோணம் அருகே அரசலாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இந்த கோயில் இருக்கக்கூடிய கிராமம் துர்கா ஆச்சி என அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் துக்காச்சி என மறுவியுள்ளது.
தல வரலாறு
1300 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த சிறப்புமிக்க திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த திருக்கோயில் தென்பகுதியில் காளகஸ்தி கோயில் என அழைக்கப்படுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருக்கக்கூடிய காஸ்தி கோயில் காற்று தளமாக விளங்கி வருகின்றது அதேபோல தெற்கு பகுதியில் இந்த திருக்கோயில் தென் காலகஸ்தி என அழைக்கப்படுகிறது.
கல்வெட்டு சாசனங்களின்படி முதலாம் ராஜராஜ சோழனால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. விக்ரமசோழன் வெண் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நோயிலிருந்து விடுபடுவதற்காக இந்த கோயிலில் வந்து பிரார்த்தனை செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு தனது நோயிலிருந்து பூரண குணமடைந்தார் என கூறப்படுகிறது.
அதற்குப் பிறகு இந்த கோயிலை விரிவுபடுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். 48 நாட்கள் இந்த கோயிலில் விக்ரமசோழன் தங்கி இருந்து தனது நோயிலிருந்து குணமடைந்தால் என புராணங்களில் கூறப்படுகிறது.
தல சிறப்புகள்
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஆபத்சகாயேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இவரின் துணைவியாரான சௌந்தரநாயகி தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் குபேரருக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.
இந்த திருக்கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்பட்டது என கல்வெட்டு மூலம் அறியப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வரலாறை உள்ளடக்கிய கல்வெட்டுகள் தற்போது பத்திரமாக இங்கு வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோயில் என இந்த கல்வெட்டுகள் மூலம் அறியப்பட்டுள்ளன.
எந்தவித நோயிலும் இருந்தும் இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நிவர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் உத்தரவின்படி இந்த திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது குடமுழுக்கு செய்யப்பட்டு புதுமையான கோயிலாக இந்த திருக்கோயில் காட்சி அளித்து வருகிறது.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள், வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்