தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The History Of Thirunageswaram Naganathaswamy Temple

HT Yatra: பாவங்களை தீர்க்கும் ராகு.. திருப்பம் தரும் திருநாகேஸ்வரம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 06:00 AM IST

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்கிவரும் இந்த தலம் சிவ தலங்களில் சிறப்பு மிக்க தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவர் ராகு பகவான். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 18 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் ராகு பகவான் 12 ராசிகளையும் கடந்து செல்வதற்கு 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

தல வரலாறு

 

ஒரு காலத்தில் இந்த பகுதியில் செண்பக மரங்கள் அதிகமாக சூழ்ந்து காணப்பட்டுள்ளது அதன் காரணமாக இந்த பகுதி செண்பக வானம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆதிசேஷன் உள்பட பல பாம்பினங்கள் இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது அதன் காரணமாக இந்த இடம் திருநாகேஸ்வரம் என பெயரிடப்பட்டுள்ளது.

நாகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய ஆதிசேஷன் இந்த திருத்தளத்தில் தவம் செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் ஆதிசேஷனுக்கு பல வரங்களை கொடுத்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன.

ஆதிசேஷன் மட்டுமல்லாது இந்த திருத்தலத்திற்கு வந்து சரஸ்வதி, லட்சுமிதேவி, முருகன், விநாயகர், சாஸ்தா உள்ளிட்டோர் வழிபட்டதாக கூறப்படுகிறது. ஒருமுறை தேவேந்திரன் அகலிகை என்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது அப்போது கௌதம மகரிஷி தேவேந்திரன் நோக்கி சாபம் பெற்றுள்ளார்.

தேவேந்திரன் தனது சாப விமோசனம் பெறுவதற்காக இந்த திருத்தளத்தில் வீற்றிருக்கக்கூடிய அம்பாளுக்கு 45 நாட்கள் வழிபாடு செய்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு சாப விமோசனம் கிடைத்ததாக தல புராணத்தில் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை இன்றும் அம்பாள் வந்து வழிபடுவதாக கூறப்படுகிறது. அதனை காவல் காப்பதற்காக கால பைரவர் அம்பாளுக்கு துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோயிலில் அம்பாள் சுதை சிற்பமாக காட்சியளிக்கின்ற காரணத்தினால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது.

இந்த கோயில் ஆதித்ய சோழனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இந்த தளத்தில் ராகு பகவானுக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, கிரிசாம்பாள், ராகு பகவான் மூவரும் பிரதான தெய்வங்களாக இந்த கோயிலில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாகவே ராக பகவான் மனித உடல் மற்றும் மனித தலை கொண்டு காட்சியளிப்பார் ஆனால் இந்த திருத்தலத்தில் தான் ராகு பகவான் முழு மனித உருவில் காட்சி கொடுக்கிறார். இந்த தலத்தில் ராகு கால நேரத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் பொழுது அவருடைய உடல் நீல நிறமாக மாறும் அதிசயம் இன்றும் காணப்படுகின்றது.

தலம் இருக்கும் இடம்

 

கோயில் நகரமான கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலின் அருகே விஷ்ணு பகவானின் திவ்யதேச தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பேருந்து வசதி, தங்குமிடம் அனைத்தும் உள்ளது.

 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.