Tamil News  /  Astrology  /  Here We Will See About The History Of Thingalur Kailasanathar Temple Where Lord Chandra Cures All Dosha

HT Yatra: சங்கடங்களை போக்கும் சந்திரன்.. சாபத்தை போக்கும் சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 05:15 AM IST

Thingalur: சந்திர பகவான் தோஷங்களை போக்கும் திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

சந்திர பகவான்
சந்திர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சூரியனுக்கு பிறகு இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது சந்திரன். சிவபெருமான் தனது தலையில் பிறையைச் சூடி அதற்கு பெருமை சேர்த்துள்ளார். இறைவன் மட்டும் அல்லாது மனித வாழ்க்கையிலும் சந்திரன் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். கண்களுக்குத் தெரிந்த கிரகமாக சந்திர பகவான் விளங்கி வருகிறார்.

உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் சந்திரன் மிக முக்கிய தேவையாக இருந்து வருகிறது. நவகிரகங்களில் முக்கிய கிரகமாக விளங்கக்கூடிய சந்திர பகவான் வரலாறு குறித்து இங்கு காணப் போகின்றோம். பெங்களூரில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோயில் சந்திர பகவான் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

தல வரலாறு

 

பாற்கடலில் கடையும் பொழுது மகாலட்சுமியோடு சேர்ந்து சந்திரன் பிறந்ததால் இவர் மகாலட்சுமியின் சகோதரராக கருதப்படுகிறார். பல்வேறு கலைகளை கற்றுக் கொண்டு நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியைப் பெற்றார். இதனால் தட்ச பிரஜாபதி தனக்கு பிறந்த 27 பெண்களையும் அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

அனைத்து பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். அதற்குப் பிறகு சந்திர பகவான் 27 பெண்களையும் அதாவது, அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களையும் திருமணம் செய்து கொண்டார். திடீரென கார்த்திகை மற்றும் ரோகிணி ஆகிய இரண்டு மனைவிகள் மீது அதிக அன்பு செலுத்தினார் .

இதனை அறிந்த தட்சன் 15 நாட்களில் நீ தேய்ந்து அழிந்து போவாய் என சாபமிட்டார். அதற்குப் பிறகு சிவபெருமானை நோக்கி தவம் இருந்து தனது சாபத்தை மீட்டெடுத்தார் சந்திர பகவான். மேலும் நான் மீண்டு வந்த இந்த தலத்தில் தாங்கள் அருள் பாலிக்க வேண்டும். திங்களூர் என எனது பெயரை இந்த ஊருக்கு வழங்கிட வேண்டுமென வேண்டிக் கொண்டார்.

இந்த தலத்தில் வீற்றிருக்கக்கூடிய இறைவன் கைலாசநாதராக அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது சந்திரனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார். தெற்கு திசை நோக்கி அம்மன் பெரிய நாயகி அருள்பாலித்து வருகிறார். சந்திர பகவான் தனி சன்னதியில் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

நவகிரகங்களில் சந்திர பகவானின் பரிகாரத்தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது. இடமாற்றத்தால் சந்திர பகவானால் ஏற்படும் சிக்கல்களைப் போக்கும் திருக்கோயிலாக திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது.

செல்லும் இடம்

 

இந்த திருக்கோயில் திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் தங்கும் வசதிகளும் உள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.