HT Yatra: அப்பனுக்கு பாடம் சொன்ன தலம்.. சுவாமிநாத சுவாமியாக மாறிய முருகன்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் வரலாறு குறித்து இங்கு காண்போம்.
வேல் கொண்டு வினை இல்லாமல் மக்களை காத்து வரும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் அறுபடை வீடு கொண்டு உலக மக்களை காத்து வருகிறார். உலகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் இவருக்கு உண்டு. பல்வேறு நிலைகளை கடந்து வாழ்க்கையில் தத்துவத்தை உணர்த்தக்கூடிய பல நிலைகளில் அறுபடை வீடுகளில் முருக பெருமான் அமர்ந்திருக்கிறார்.
அந்த வகையில் தந்தைக்கு குருவாக மாறிய இடம் தான் சுவாமிமலை. இது ஆறுபடை வீடு கொண்ட முருக பெருமான் கோயில்களில் நான்காவது படை வீடாக திகழ்ந்து வருகின்றது. இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் உள்ளது. வேண்டிய வரமளிக்கும் நாயகனாக இந்த சுவாமி மலையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் சுவாமிநாத சுவாமி ஆக முருக பெருமான் வீற்றிருக்கின்றார். இவர் வீற்றிருக்கும் பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையாராக உள்ளது. அதன் மேல் அவர் எழுந்தருளி உள்ள காரணத்தினால் இவர் சுவாமிநாத மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார்.
சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் இருவரும் ஒருவரே என்பதற்கு இதுவே ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. திருவிழா காலங்களில் சிவபெருமான் எப்படி பஞ்சமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகின்றாரோ அதேபோல சுவாமி மலைகள் முருகப்பெருமான் பஞ்சமூர்த்தியாக எழுகின்றார்.
தல வரலாறு
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மதேவருக்கு பிரணவ மந்திரத்தின் அறியாமல் இருந்து வந்தது. இது குறித்து அறிந்த முருக பெருமான். படைக்கும் தொழிலை செய்யும் உங்களுக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாதா என்று கூறி தலையில் கொட்டி அவரை சிறை படுத்தினார்.
இதுகுறித்து அறிந்த சிவபெருமான் முருகன் பெருமான் மீது கோபம் கொள்வது போல் நடித்து அவரை திட்டினார். பிரணவ மந்திரத்தின் பொருள் உங்களுக்கு தெரியுமா என சிவபெருமானை நோக்கி முருகன் கேட்டார். எனக்கு தெரியாது நீ உபதேசம் செய் என முருக பெருமானிடம் சிவபெருமான் கூறினார்.
உங்களுக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் சீடராகவும் நான் குருவாகவும் மாற வேண்டும் என முருக பெருமான் கூறினார். அதற்கு இணங்க தனது மகனை குருவாக ஏற்று சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை சீடராக கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரம்மதேவருக்கும் முருக பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
தந்தைக்கு குருவாக மாறி முருகப்பெருமான் உபதேசம் செய்த இடம் தான் இந்த சுவாமிமலை என தல புராணத்தில் கூறப்படுகிறது. எந்தவித பாகுபாடும் இன்றி சிவபெருமானும் முருகனும் ஒருவரை ஒருவர் புரிந்து ஏற்று வேறுபாடு இல்லாமல் நடந்து கொண்டதால் இந்த தளத்தில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என அழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் மனதில் ஏற்படக்கூடிய வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி உறவில் ஒற்றுமை உருவாகும் எனக் கூறப்படுகிறது. தந்தை மகனுக்கு இடையே ஏற்படக்கூடிய விரிசல்களை நிவர்த்தி செய்யும் நாயகனாக சுவாமிமலை முருகப்பெருமான் திகழ்ந்து வருகிறார்.
அதுமட்டுமல்ல அது பல்வேறு விதமான சிக்கல்களை முருகப்பெருமானிடம் முறையிட்டால் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.
வசதிகள்
கும்பகோணத்தில் இருந்து இந்த கோயிலுக்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. இந்த கோயிலுக்கு அருகே தங்குமிடம் உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. விமானத்தில் பயணிக்க கூடியவர்கள் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் வந்து சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9