HT Yatra: பசு வழிபட்ட பசுபதீஸ்வரர்.. வேண்டுதலால் அதே இடத்தில் அமர்ந்த சிவன்
ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
உலக உயிர்களின் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார். மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்ட சிவபெருமான். மனிதர்களுக்கு மட்டும்தான் அருள் பாலிப்பார் என்று கிடையாது. மனிதர்கள் மட்டும்தான் சிவபெருமானை வணங்குவார்கள் என்பதும் கிடையாது. உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களும் சிவபெருமானை வணங்கி வாழ்வதாக ஆன்மீகம் கூறுகின்றது.
அந்த வகையில் பசுமாடு வழிபாடு செய்த தளமாக பிரசித்தி பெற்று திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில் விளங்கி வருகிறது. இந்த திருத்தளத்தில் மூலவர் சுயம்புலிங்க வடிவில் பசுபதீஸ்வரராக அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் ஐந்து பைரவர்கள் சிவபெருமானை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.
அதன் காரணமாக இந்த கோயில் பஞ்சபைரவர் தளம் எனவும் சிறப்பாக பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் அம்மன் மங்கலாம்பிகை மற்றும் பங்கஜவல்லி என இரண்டு பேராக அருள் பாலித்து வருகிறார். பங்கஜ்பள்ளி தாயார் மிகவும் பழமையான சிலை என்றும். மங்களாம்பிகை தாயார் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தல புராணம்
உலகத்தில் நோக்கி வந்த பார்வதி தேவி தவம் செய்வதற்காக இந்த இடத்தில் தங்கியுள்ளார். பார்வதி தேவியின் தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் தனது ஜடாமுடியோடு காட்சி கொடுத்து அருள் பாலித்தார். அப்போது வனமாக இருந்த இந்த இடத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான, பட்டி அறிந்தது. உடனே அங்கே ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.
கன்று குட்டியின் அபிஷேகத்தில் மனமகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சி கொடுத்தார் உடனே கன்றுக்குட்டி சிவபெருமானை இங்கே நிரந்தரமாக நீங்கள் தங்க வேண்டும் என வேண்டிக் கொண்டது. சிவபெருமானும் அவ்வாறே அந்த இடத்தில் தங்கியதாக புராணத்தில் கூறப்படுகின்றது பசு வழிபட்ட தலம் என்பதால் இந்த திருக்கோயில் பசுபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
அதேபோல காமதேனும் வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்றது. அதற்குப் பிறகு பிரம்மதேவனின் அறிவுரையை பெற்று உலகத்திற்கு வந்து இங்கு காட்சி கொடுத்து வந்த சிவபெருமானை வழிபட்டு சாபத்தை நீக்கிக் கொண்டது.
வழிபாடுகள்
இந்த கோயிலில் வழிபாடு செய்தால் திருமண தடை, கல்வி சிக்கல்கள், குழந்தையின்மை உள்ளிட்ட அனைத்து சிக்கல்களும் விலகும் என கூறப்படுகிறது. வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
இந்த கோயில் கும்பகோணத்தில் இருந்து கோவிந்தகுடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. பேருந்து வசதிகளும் உள்ளது. ஆவூர் என்ற இடத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. தங்கும் விடுதி வசதிகள், போக்குவரத்து வசதிகள் உணவு விடுதிகள் என அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளது. அங்கிருந்து சில மணி நேரங்களில் இந்த கோயிலுக்கு சென்று விடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9