தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The History Of Sri Chakravageswarar Temple

HT Yatra: எமனிடம் இருந்து காக்கும் சக்ரவாகேஸ்வரர்.. பிரம்மன் சாபம் நீங்கிய தலம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 06:00 AM IST

Sri Chakravageswarar Temple: ஶ்ரீ சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

சக்ரவாகேஸ்வரர்
சக்ரவாகேஸ்வரர்

ட்ரெண்டிங் செய்திகள்

தென்கரை தலங்களில் 17வது தலமாக அமைக்கப்பட்டுள்ள தலம் தான் திருசக்கராபள்ளி. இந்த தளம் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் இறைவன் சக்கரவாகேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார் தாயார் தேவநாயகியின் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் குறித்து திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

தல வரலாறு

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை மகாவிஷ்ணு வழிபாடு செய்து சக்ராயுதம் பெற்றதால் இந்த திருத்தலம் திருசக்கராப்பள்ளி என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. உன் சாபம் பெற்ற பிரம்மா சக்கரவாகப் பறவையாக மாறினார் அதன் பின்னர் இந்த கோயிலுக்கு வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி விட்டு அந்த நீரைக் கொண்டு இறைவனை வழிபாடு செய்துள்ளார் அதற்க்கு பிறகு சிவபெருமான் பிரம்மதேவருக்கு சுய உருவை கொடுத்துள்ளார் சக்கரவாகப் பறவையாக பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமான் சக்கரவர்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இதில் ராஜகோபுரம் கிடையாது முகப்பு வாயில் மட்டுமே உள்ளன. கோயில் உள்ளே நுழைந்த உடன் அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. இந்த திருத்தளத்தில் இறைவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். நான்கு திருக்கரங்கள் கொண்டு வள்ளி தெய்வானையோடு முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் சண்டிகேஸ்வரர் பிரகாரத்திற்கு எதிரே கையில் திரிசூலம் வைத்துக் கொண்டு துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் இந்த அம்மனை மனதார வழிபட்டு பூஜை செய்தால் எம பயம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

அம்பாள் சன்னதிக்கு எதிரே எம பயம் நீக்குவதற்காக குங்கிலிய குண்டம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் குங்கிலிய பொடி தூவி வழிபாடு செய்தால் எம பயம் நீங்கும் எனவும் மாங்கல்ய பலன் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.