HT Yatra: பொங்கல் சொர்க்க வாசல் திறப்பு.. ஆற்றின் நடுவே சயன காட்சி
ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
உலகத்தை காக்கும் கடவுளாக விளங்கக்கூடிய விஷ்ணு பகவான் பல்வேறு விதமான கோலத்தில் காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். காவிரிக்கு தீவு போல் அமைந்திருக்கக் கூடிய தளம் தான் ரங்கநாத சுவாமி திருக்கோயில்.
இந்தக் கோயில் முதல் தளம் என்கின்ற காரணத்தினால் இது ஆதிரங்கம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய அரங்கநாதர் திருக்கோயில் அந்தரங்கம் என அழைக்கப்படுகிறது. ஆதிரங்கத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவனசமுத்திரம் திருக்கோயில் மத்திய ரங்கம் என அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய ரங்கநாதர் சயன கோளத்தில் காட்சி கொடுக்கிறார். அனைவரும் புண்ணிய நதியான காவிரி நீரில் ஐப்பசி மாதத்தில் நீராடி தங்களது பாவத்தை போக்கிக் கொண்டனர். பாவங்கள் அதிகமான காரணத்தினால் தண்ணீர் கரைந்து போனதனால் காவிரி கோர வடிவம் கொண்டது.
அதன் பின்னர் காவிரித்தாய் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பெருமாளை வழிபட்டு பூஜை செய்த காரணத்தினால் அவருக்கு பெருமாள் சாப விமோசனம் கொடுத்தார். அதேபோல திருப்பாத தரிசனத்தை நிரந்தரமாக பெரும்படி அவருக்கு அருளும் வழங்கினார். தனது காலடியில் அமர்ந்திருக்க அனுமதியும் கொடுத்தார்.
இதன் காரணமாக இந்த திருக்கோயிலில் காவிரித்தாய் கையில் மலர் வைத்தபடி அமர்ந்து காட்சி கொடுக்கின்றார். காவிரித் தாயின் பாவத்தை போக்கியதற்காக நன்றி கடன் செலுத்துவது போல் இந்த கோயிலில் மாலையிட்டது போல பிரிந்து காவிரி நீர் ஓடுகிறது.
நடு ஆற்றின் மத்தியில் தீவு போல் இந்த கோயிலில் காட்சியளிக்கும். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இந்த திருத்தளத்தில் காட்சி கொடுப்பதால் இது ஸ்ரீரங்கப்பட்டணம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய ரங்கநாதரோடு யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய பாதத்திற்கு எதிரில் கௌதமர் நிற்பார்.
மகர சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் அன்று இந்த திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரங்கநாதர் சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இந்த திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விசேஷ பூஜை மற்றும் நடைபெறும்.
தை மாத முதல் நாள் தொடங்கப்படும் விழாவானது ஒன்பது நாள் தொடர்ந்து நடக்கும் சூரியன் உதய நேரத்தில் சூரிய மண்டலமான அவரது வாகனத்தில் எழுந்தருளி தேரில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரே மாதத்தில் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுவது இந்த கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருக்கோயில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மைசூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தங்குமிடம் போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் இங்கு உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9